நாங்கள் இருக்கிறோம்: தாய் தந்தையர்களுக்கு ஆலோசனைகள் அளிக்க
உங்கள் குழந்தை பிறந்த முதல் சில ஆண்டுகளிலேயே வளர்ந்து தனக்கான தனிப்பட்ட ஆளுமையை அடைந்து விடுகிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்தான் - ஆனால் அதனுடன் கூடவே பிரச்சினைகளும் சில சமயங்களில் உருவாகின்றன.
அப்பிரச்சினைகளை உங்களிடமே வைத்துக் கொள்ளாதீர்கள். கைக்குழந்தைகள், ஐந்து (5) வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய் தந்தையர் என்னும் வகையில் உங்களுக்கு பல கடமைகள் உண்டு. அவற்றை நீங்கள் நிறைவேற்ற உங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் நாங்கள் வருவோம்..
கீழ்க்கண்ட விஷயங்கள் சம்பந்தமான உங்கள் கேள்விகளுடன் நீங்கள் எங்களை அணுகலாம்:
- குழந்தை வளர்ப்பு மற்றும் பேணுதல்
- குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களைப் பராமரித்தல்
- பிரச்சினையான சூழ்நிலைகள் அவற்றை எவ்வாறு சமாளிப்பது போன்ற விஷயங்கள்
கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றி உங்களுக்கு தகவல் அளிப்போம்:
- குழந்தைகளை பிக்-அப் செய்யும் இடங்கள் மற்றும் அவர்களது பொழுதுபோக்குக்கான சாத்தியக்கூறுகள்
- குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளல்
- பாடத்திட்டங்கள் மற்றும் ஆலோசனை சேவை அளிப்புகள்
- மேலதிக ஆதரவு மற்றும் ஆலோசனை மையங்களின் தொடர்புக்கான முகவரிகள்
இந்த ஆலோசனை சேவை உங்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆலோசனை அளிப்பவர்களுக்கு உங்களிடமிருந்து பெறும் அந்தரங்க விஷயங்களைப் பாதுகாக்கும் கடமை உண்டு.
நாங்கள் உங்கள் அருகாமையிலுள்ள வட்டார ஆலோசனை மையங்களிலிருந்து தொலைபேசி மூலமாகவும், முன்கூட்டியே நேரம் நிர்ணயம் செய்துகொண்டு சமூக மையங்களில் நேரடியாகவும் ஆலோசனை அளிக்கிறோம். தேவையானால் உங்கள் வீட்டுக்கும் நாங்கள் வருவோம்.